விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 14 May 2022 11:24 PM IST (Updated: 14 May 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி மன்றத்தின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் கடைபிடிக்கப்பட்டது. சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி மன்றத்தின் வாசலில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது. பேரணியை பேரூராட்சி  தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அலுவலர் ஜான்முகமது ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிங்கம்புணரி சிறுவர் பூங்கா மற்றும் சீரணி அரங்கம், சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் பேரூராட்சி மன்றத் தலைவர் அம்பல முத்து தலைமையில் துணை தலைவர் இந்தியன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது மற்றும் கவுன் சிலர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது நிஷா, ஜெயசித்ரா லோகநாதன், சத்யா சத்திய மூர்த்தி, வள்ளி மனோகரன், ஜெய பாக்கியம் திருமாறன், மீனா, தனசேகரி சோமசுந்தரம், அலாவுதீன், மணிசேகரன், செந்தில் கிருஷ்ணன், தாயு மானவன், ராமலட்சுமி ஞானி செந்தில், திவ்யா பிரேம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story