சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் இருமுறை இயக்கம்


சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் இருமுறை இயக்கம்
x
தினத்தந்தி 14 May 2022 11:25 PM IST (Updated: 14 May 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 23-ந் தேதி சேலம்- விருத்தாசலம் பயிகள் ரெயில் இருமுறை இயக்கப்படுகிறது.

சேலம்:
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, அந்த ரெயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இதனால் சிரமத்திற்கு உள்ளான பயணிகள், மீண்டும் பழைய முறைப்படி ரெயில் சேவையை இரண்டு முறை இயக்க வேண்டும் என்று ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்ைக விடுத்தனர். இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி முதல் பழைய முறைப்படி சேலம்-விருத்தாசலம் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சேலம்-விருத்தாசலம் ரெயில் (வண்டி எண்-06896) காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மார்க்கெட், டவுன், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், சின்னசேலம் வழியாக விருத்தாசலத்திற்கு மதியம் 1.05 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் மதியம் 2.05 மணிக்கு விருத்தாசலத்தில் ரெயில் புறப்பட்டு சேலத்திற்கு மாலை 5.05 மணிக்கு வந்து சேரும். எனவே,இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story