சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்


சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 11:25 PM IST (Updated: 14 May 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

சங்ககிரி:-
சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சென்னகேசவ பெருமாள், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு நாள்தோறும் பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், ஆராதனை நடந்தது. நாள்தோறும் இரவில் அன்னப்பட்சி வாகனம், சிங்க வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. சாமிக்கு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 
விழாவில் சுந்தரராஜன் எம்.எல்.ஏ. மற்றும் கோவில் திருவிழா ஆலோசனைக்குழு தலைவர் கே.எம்.ராஜேஷ், குழு உறுப்பினர்கள் பி.தங்கமுத்து, மணிமொழி, சுப்பிரமணியன், ராஜவேல், அருண்பிரபு, தளபதி சண்முகம், சங்ககிரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.சி.ஆர் ரத்தினம், சங்ககிரி நகர செயலாளர் செல்வம், என்.எம்.எஸ்.மணி உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை பக்தி கோஷம் முழங்க வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் ரத வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலைக்கு வந்து சேர்ந்தது.
 ===

Next Story