`ஆசிரியர்கள் விரும்பும் ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
ஆசிரியர்கள் விரும்பும் ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்
சாத்தான்குளம்:
ஆசிரியர்கள் விரும்பும் ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழா
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் வட்டக்கிளை சார்பில், இயக்க உறுப்பினர்கள் கூடுகை விழா மற்றும் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் வட்டார செயலாளருமான மறைந்த தலைமை ஆசிரியர் செல்வராஜ் சாமுவேல் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. வட்டார தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் ரெக்ஸ் அமிர்த ஜெயரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அருள்ராஜ் வரவேற்று பேசினார்.
தென் மண்டல ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின், சாத்தான்குளம் சேகர குரு செல்வன் மகாராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். செல்வராஜ் சாமுவேல் உருவப்படத்தை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இயக்க பொதுச்செயலாளர் ரங்கராஜன் திறந்து வைத்தார்.
விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஆசிரியர்கள் விரும்பும் ஆட்சி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகளை முதல்-அமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி தருவார். ஆசிரியர்களுக்கு அகவிலைபடி உயர்வை அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு ஆசிரியர்கள் விரும்பும் ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுபடுத்திட என்றும் ஆசிரியர்கள் ஆதரவு தர வேண்டும்.
சாத்தான்குளத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நிதி ஒதுக்கி பணி நடந்து வருகிறது. பெரியதாழையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள், கூட்டணி மாநில தலைவர் லட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் குமார், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜெகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் (பொறுப்பு) செல்வகுமார், சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story