ஆதனூரில் மஞ்சுவிரட்டு


ஆதனூரில் மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 14 May 2022 11:36 PM IST (Updated: 14 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஆதனூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

திருமயம்:
திருமயம் அருகே ஆதனூர் செங்கமலவல்லி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், பள்ளத்தூர், அறந்தாங்கி, அழகாபுரி, கோனார்பட்டு, ஆத்தங்குடி, அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  களத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். 

Next Story