வேலூரில் தக்காளி விலை திடீர் உயர்வு
வேலூரில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது.
வேலூர்
வேலூரில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. வேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. எனவே வேலூரில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று மார்க்கெட்டில் ரூ.80-க்கு (மொத்தவிலை) விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோவிற்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 வரை விலையை ஏற்றி விற்பனை செய்தனர்.
Related Tags :
Next Story