ஜவுளி ஏற்றுமதியாளர்களுடன் கைத்தறி முதன்மை செயலாளர் கலந்துரையாடல்


ஜவுளி ஏற்றுமதியாளர்களுடன் கைத்தறி முதன்மை செயலாளர் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 15 May 2022 12:04 AM IST (Updated: 15 May 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் கைத்தறி, காதி உற்பத்தி துறை அரசு முதன்மை செயலாளர் கலந்துரையாடினார்.

கரூர், 
கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி பூங்காவில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுடன், கைத்தறி, காதி உற்பத்தி துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரசாத் யாதவ் நேற்று கலந்துரையாடினார்‌. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், அரசு துணிநூல் ஆணையர் வள்ளலார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், கரூரில் வர்த்தக வழிகாட்டு மையம், கண்காட்சி கூடம், அருங்காட்சியகம், திறன் வளர்ப்பு பயிற்சி உள்ளடக்கிய வர்த்தக வழிகாட்டு மையம் அமைக்க வேண்டும். டையிங், பிரிண்டிங் பூங்கா அமைக்க வேண்டும். சிறு, குறு ஜவுளி பூங்கா திட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை செய்து அரசாணை வெளியிட வேண்டும். மிஷன் (2020-2030) கரூர் மாநகரில் ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் செய்ய தேவையான வழிமுறைகளை வகுக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கிட வேண்டும். வெளியூர்களில் இருந்து கரூர் நகரில் வந்து வேலை செய்பவர்களுக்கு விடுதி வசதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை செய்துதர கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர், ஜவுளி தொழில் அதிபர்களிடம், சென்னையில் டெக்ஸ்டைல் சிட்டி ரூ.10 கோடியளவில் அமைப்பதற்காகவும், கரூரில் பின்னலாடை தொழில் சிறப்பாக செயல்படுவதாகவும், அதேபோல் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்வதற்காகவும், தொழிற்சாலைகளுக்கு கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு பதிலாக கிராம பகுதிகளில் சிறு, சிறு தொழில் கூடங்கள் அமைப்பதற்காகவும் கருத்துக்களை கேட்டறிந்தார். முன்னதாக ஜவுளி பூங்காவில் உற்பத்தி பிரிவுகளையும், ஜவுளி பூங்காவின் முழு பகுதியையும், மலைக்கோவிலில் உள்ள பயன்பாடு இல்லாத கரூர் கூட்டுறவு நூற்பாலையையும் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, கரூர் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை இயக்குனர் டெக்ஸ்டைல்ஸ் அம்சவேணி, உதவி இயக்குனர் காதி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story