கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மண் குளியல் சிகிச்சை முகாம்


கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மண் குளியல் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 15 May 2022 12:05 AM IST (Updated: 15 May 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மண் குளியல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கரூர், 
கரூர் பழைய அரசு மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவில் மண் குளியல் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் சுகுமார் தலைமை தாங்கினார். இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மண் குளியல் சிகிச்சை எடுத்து கொண்டனர். உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கவும், சரும நோய்கள் வராமல் தடுக்கவும் இந்த மண் குளியல் சிகிச்சை உதவுகிறது என்றும், இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகள் மாதந்தோறும் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Next Story