இந்து மகா சபாவினர் ஒற்றைக்காலில் நின்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் இந்து மகா சபாவினர் ஒற்றைக்காலில் நின்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஒற்றை காலில் நின்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமை தாங்கினார்.. இந்து மகா சபா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் ஜெயராஜ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதன் தொகுப்பாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story