ஸ்ரீவைகுண்டம் அருகே, குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


ஸ்ரீவைகுண்டம் அருகே, குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை  கணவர் மீது ஊற்றிய பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 May 2022 12:23 AM IST (Updated: 15 May 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே, குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது பெண் ஊற்றினார்

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே, குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது பெண் ஊற்றினார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தை அடுத்த கீழ நட்டார்குளம் சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் திருப்பதி ராஜா (வயது 28). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தி (வயது 24). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் சமையல் செய்தபோது, கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வசந்தி, சமையலறையில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை பாத்திரத்துடன் கணவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
சிகிச்சை
இதில் படுகாயமடைந்த திருப்பதி ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வசந்தியை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story