கரூர் ராணுவ அதிகாரி திடீர் மரணம்


கரூர் ராணுவ அதிகாரி திடீர் மரணம்
x
தினத்தந்தி 15 May 2022 12:26 AM IST (Updated: 15 May 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சி சென்ற கரூர் ராணுவ அதிகாரி திடீர் மரணம் அடைந்தார்.

நச்சலூர், 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 57). இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 1989-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து கொல்கத்தாவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தநிலையில் பதவி உயர்வு பெற்று கடந்த மே 1-ந்தேதி குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று காலை வழக்கம்போல் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென்று மயங்கி  விழுந்துள்ளார். இதையடுத்து, சக ராணுவ வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வாசுதேவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த வாசுதேவனுக்கு பரிமளா (45) என்ற மனைவியும், சோனாலி (24), ஆர்த்தி (21) ஆகிய 2  மகள்களும் உள்ளனர். இதில் முதல் மகள் சோனாலிக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் வாசுதேவனின் உடல் குஜராத்திலிருந்து நாளை (திங்கட்கிழமை) சொந்த ஊருக்கு வந்தவுடன் அடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story