கன்னியாகுமரியில் தடையை மீறி உண்ணாவிரதம்; 37 பேர் கைது
கன்னியாகுமரியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி, மே.15-
கன்னியாகுமரியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
37 பேர் கைது
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் விபத்தை தடுக்க வேகத்தடை, மின் விளக்கு, சிக்னல் அமைக்க கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதற்கு கன்னியாகுமரி போலீசில் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து தடையை மீறி மகாதானபுரம் ரவுண்டானாவில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
உடனே உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்துக்கு நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரி குமாரன் ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்துக்கு அனுமதி அளிக்காததால் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story