2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 May 2022 12:32 AM IST (Updated: 15 May 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த பள்ளமடையை சேர்ந்தவர் சீவல்ராஜ் (வயது 29). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முன்விரோதம் காரணமாக மொட்டை மாடியில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் பன்னீர்ஊத்து, சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அஜித்குமார் (22) என்பவரை மானூர் போலீசார் கைது செய்தனர்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.
இதே போல் வீரவநல்லூர் அருகே கடந்த மாதம் 11-ந்தேதி நகை கடை உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி 4½ கிலோ தங்க நகை மற்றும் பணத்துடன் கூடிய பையை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் திருப்புடைமருதூர், ரத்தினவேல் பாண்டியன் காலனி பிள்ளையார் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த சமுத்திரம் மகன் அழகுசுந்தரம் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இந்த உத்தரரவு நகலை வீரவநல்லூர் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.

Next Story