சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 15 May 2022 12:35 AM IST (Updated: 15 May 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருவெண்காடு:
சீர்காழி அருகே உள்ள திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை ஒட்டி நந்தி பகவான், சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து கங்கை நீர்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார். 
இதேபோல்  கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிக்காமர் ஈஸ்வரர் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், ஆச்சாள்புரம் சிவலோகநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Next Story