விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க கோரிக்கை
பேட்டையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது ஜன பொது நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்க தலைவர் முகமது அய்யூப், செயலாளர் ஜமால் முகமது உசைன், பொருளாளர் முகமது கசாலி மற்றும் நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகில் ரோடு வளைவாகவும், மிகவும் குறுகலாகவும் உள்ளது. இது பொதுமக்கள் தங்களது வீட்டு தேவைகளுக்கு தினமும் வந்து செல்லும் கடைகள் நிறைந்த பஜார் பகுதி ஆகும். இந்த இடத்தை கடந்து செல்லும் வாகனங்களால் பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். அவ்வப்போது வாகனங்கள் பொதுமக்களை உரசிக்கொண்டு செல்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த திருப்பத்தில் திரும்பிய பஸ், ஒரு கடையின் முகப்பை சேதப்படுத்தியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அங்கு விபத்துகளை தடுக்க வளைவு ரோட்டுக்கு இருபுறமும் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.
இதேபோல் சற்று தொலைவில் தபால் அலுவலகம் அருகே உள்ள 2 பக்க வளைவுகளும் ஆபத்து பகுதியாக உள்ளது. எனவே அங்கும் இருபக்கமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.
Related Tags :
Next Story