ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்-அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்


ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்-அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 May 2022 12:44 AM IST (Updated: 15 May 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி ஒன்றியத்தில் பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

காரியாபட்டி,

 நரிக்குடி ஒன்றியத்தில் பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். 

புதிய கட்டிடங்கள்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் பிள்ளையார்குளம் கிராமத்தில் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம், புல்வாய்க்கரையில் ரூ.9½ லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம், எஸ்.வல்லக்குளத்தில் பயணியர் நிழற்குடை, இனக்கனேரியில் புதிய கலையரங்கம், சீனிமடையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சமுதாயக்கூடம் ஆகிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடங்களை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்து பேசினார்.
 அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்

 தேர்தலின்போது புல்வாய்க்கரையில் வாக்கு சேகரிக்க நான் வந்தபோது எங்கள் ஊருக்கு கலையரங்கம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். தற்போது பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிகொடுத்துள்ளோம். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் வாங்கப்பட்ட மனுக்கள் மீது தற்போது உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் என்ற திட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு திட்டங்கள ்நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்கள் திருச்சுழி தொகுதியில் நிறைவேற்றப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ப.பா.போஸ்த் தேவர், கு.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் காளீஸ்வரி, சமயவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story