நாகர்கோவிலில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
குடோனில் தீ விபத்து
நாகர்கோவில் பார்வதிபுரம் சானல் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 59). இவருக்கு சொந்தமாக வல்லன்குமாரன்விளையில் பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு ஏராளமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. குடோனில் இருந்து நேற்று அதிகாலை புகை கிளம்பியது. இதை கண்ட மக்கள், கோபிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே நிலைய அதிகாரி பென்னட் தம்பி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொருட்கள் நாசம்
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் குடோனில் இருந்து பழைய பிளாஸ்டிக் மற்றும் மின்சாதன பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story