டான்செட் நுழைவு தேர்வை 905 மாணவர்கள் எழுதினர்
நெல்லையில் டான்செட் நுழைவு தேர்வை 905 மாணவர்கள் எழுதினர்.
நெல்லை:
இளநிலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை பட்ட மேற்படிப்புகளான எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. போன்ற படிப்புகளில் சேருவதற்கான ‘டான்செட்’ எனும் பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று காலையில் எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 440 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
மாலையில் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வை 465 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். வெளியூர்களில் இருந்து வந்த மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். இதனால் நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் கூட்டமாக இருந்தது.
Related Tags :
Next Story