கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 12:53 AM IST (Updated: 15 May 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருமணஞ்சேரியில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி குத்தாலத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,:
திருமணஞ்சேரியில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி குத்தாலத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு சமூகத்தினர் மோதல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியில் கடந்த 7,8-ந் தேதிகளில் கோவில் திருவிழாவின் போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. 
இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில்  மோதல் சம்பவத்தில் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பா.ம.க.  சார்பில் குத்தாலம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன், திருமணஞ்சேரி மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க. அய்யாசாமி, பா.ம.க. மாநில இளைஞரணி துணை தலைவர் விமல், வக்கீல் பாரி, சந்தானம், குரு, வைத்தி, பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ், அ,தி.மு.க., தி.மு.க.வினர்  மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
 இரு சமூகத்தினர் இடையே மோதலை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க  மாவட்ட துணை சூப்பிரண்டு வசந்தராஜ், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story