விருத்தாசலத்தை மையமாக கொண்டு புதிய மாவட்டம்


விருத்தாசலத்தை மையமாக கொண்டு புதிய மாவட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 12:57 AM IST (Updated: 15 May 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் விருத்தாசலத்தை மையமாக கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநத்தம்

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மங்களூர் ஒன்றிய 21-வது மாநாடு ராமநத்தம் சமுதாயநலக் கூடத்தில் திட்டக்குடி வட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் நிதிஉலகநாதன் தலைமையில் நடைபெற்றது. ராஜ்குமார், காஜாமுகம்மது, பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் வரவேற்றுபேசினார். மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட நிர்வாகக்குழு சின்னதுரை, மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் முருகையன், நகர செயலாளர் செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஒன்றிய செயலாளராக நிதிஉலகநாதன்,  துணை செயலாளராக தேவா, பொருளாளராக அம்பிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ராமநத்தம் பகுதியில் பருத்தி, மரவள்ளி கிழங்கு, மணிலா, மக்காச்சோளம் ஆகியவைக்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும், உழவர் சந்தை திறக்க வேண்டும், விருத்தாசலத்தை மையமாக வைத்து புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ராமநத்தம் பஸ்நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு சமுதாயநலக்கூடத்தை வந்தடைந்தனர்.

Next Story