பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 12:58 AM IST (Updated: 15 May 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூரில் நடைபெற்றது.

கரூர், 
கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். கரூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாற்றம், குடும்ப அட்டை நகல் விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு தீர்வுகாண பொதுமக்கள் மனு அளித்தனர்.
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் குளித்தலை தாசில்தார் விஜயா பொதுமக்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார். 

Next Story