வேதியியல் மன்ற தொடக்க விழா


வேதியியல் மன்ற தொடக்க விழா
x
தினத்தந்தி 15 May 2022 1:05 AM IST (Updated: 15 May 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறையில் வேதியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

சிதம்பரம், 

சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறையில் வேதியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சே.மீனா தலைமை தாங்கினார். வேதியியல் துறைத்தலைவர் முனைவர் ம.சேகர் குத்துவிளக்கு ஏற்றினார். வேதியியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயர் ஆராய்ச்சிமைய இணைப்பேராசிரியர் முனைவர் எம்.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேதியியல் மன்றத்தை தொடங்கி வைத்து ”எதிர்கால கடல் வேதியியல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவின் முடிவில் பேராசிரியை டார்லின் குயின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதியியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் ராஜு மற்றும் பிரேமலதா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story