பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 டன் பழைய துணிகள் அகற்றம்


பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 டன் பழைய துணிகள் அகற்றம்
x
தினத்தந்தி 15 May 2022 1:12 AM IST (Updated: 15 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக உள்ளது. இதனை அவ்வப்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆற்றில் சுற்றுலா பயணிகள் விட்டுச்சென்ற துணிகளை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் நேற்று தூய்மை பணியாளர்கள் 7 டன் எடையுள்ள கழிவு துணிகளை அகற்றினார்கள். மேலும் 450 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களையும் பாபநாசம் படித்துறையில் இருந்து அகற்றி நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

Next Story