இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம்


இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 1:16 AM IST (Updated: 15 May 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம் நடந்தது.

நெல்லை:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம் மற்றும் 70 வயது நிறைவு அடைந்தவர்களுக்கான பாராட்டு விழா ஆகியவை பாளையங்கோட்டையில் நடந்தது. சங்க கவுரவத் தலைவர் பி.டி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ஸ்ரீதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அன்புமணி கலந்துகொண்டு 70 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பேசினார். கூட்டத்தில் நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சங்க மாநில பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம், பொருளாளர் கணேசன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி நல்லபெருமாள், மாயாண்டி பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் செல்லப்பா நன்றி கூறினார்.

Next Story