தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 May 2022 1:35 AM IST (Updated: 15 May 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
குத்தாலம் தாலுகா கோமல் கடைவீதியையொட்டி வீரசோழன் ஆற்றில் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஆற்றில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், முதியவர்கள் மற்றும் பெண்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

                                                                                                                                              -பொதுமக்கள், கோமல்.

Next Story