ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாமில் வீடு,வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பு
ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாமில் வீடு,வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
அலங்காநல்லூர்
ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாமில் வீடு,வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
பாலமேடு பேரூராட்சி
பாலமேடு பேரூராட்சி சார்பில் ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு பணி முகாம் நடந்தது. இதில் பேரூராட்சிக்குட்பட்ட வலையபட்டி சாலை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த பணிகள் நடந்தது. பணியை, தலைவர் சுமதிபாண்டியராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் தேவி, துணை தலைவர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள், பணியாளர்கள், மகளிர் குழுவினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் கிரண்குமார் நன்றி கூறினார்.
ஒருங்கிணைந்த துப்புரவு பணி
மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் குமரன், துணைத்தலைவர் கலைவாணன், செயல் அலுவலர் நீலமேகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டன. பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை சேகரித்தனர். தண்ணீர் தேங்கி கொசுக்கள் வளராமல் தடுப்பது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் ஒருங்கிணைந்து பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு பணி முகாம் தொடங்கப்பட்டது. அப்போது பிரதான கடைவீதி இப்பகுதியில் துப்புரவு பணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல்அலுவலர் சுதர்சனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லதாகண்ணன், சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முகாமினை தொடங்கி வைத்து துப்புரவு பணியை செய்தார். வார்டு உறுப்பினர்கள் சத்யபிரகாஷ், குருசாமி, முத்துசெல்வி சதீஷ்குமார் ஆகியோர் இத்திட்டம் குறித்து பேசினார்கள். சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story