ஜவுளி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
ஜவுளி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதர் புகுந்து பெட்டியில் இருந்த ரூ.22 ஆயிரத்தைதிருடிச் சென்று விட்டார். இதேபோலஅதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும்திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதில் தேனி மாவட்டம் குள்ளபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்று தெரியவந்தது. மேலும் இவர் ஜவுளிக்கடையில் பணமும், டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இது சக்கர வாகனத்தையும் திருடியது தெரியவந்தது.. இதனையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story