பெங்களூரு: மாநகராட்சி லாரி மோதி உணவு விற்பனை பிரதிநிதி சாவு


பெங்களூரு: மாநகராட்சி லாரி மோதி உணவு விற்பனை பிரதிநிதி சாவு
x
தினத்தந்தி 15 May 2022 2:33 AM IST (Updated: 15 May 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரி மோதிய விபத்தில உணவு விற்பனை பிரதிநிதி உயிரிழந்துள்ளார்.

பெங்களூரு:

யாதகிரி மாவட்டம் சுராப்புராவை சேர்ந்தவர் தேவண்ணா (வயது 25). இவர் பெங்களூருவில் தங்கி இருந்து ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நாகவாராவில் இருந்து ஹெக்டே நகருக்கு தேவண்ணா, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தனிசந்திரா ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, தேவண்ணா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவண்ணா பரிதாபமாக இறந்தார்.

  இந்த சம்பவம் குறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி லாரி டிரைவர் தினேஷ் (40) என்பவரை கைது செய்தனர். மாநகராட்சி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் கடந்த ஒரே மாதத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 3 பேர் இறந்தனர். இந்த நிலையில் தற்போது மாநகராட்சி லாரி மோதி உணவு விற்பனை பிரதிநிதி இறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story