ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா; திறக்க பொதுமக்கள் கோரிக்கை


ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா; திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 2:35 AM IST (Updated: 15 May 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்காவை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு
ஈரோட்டில் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்காவை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவியல் தொழில்நுட்ப பூங்கா
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் முதல் முறையாக அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் சூரம்பட்டி அணைக்கட்டு அருகில் பணிகள் நடைபெற்றது.
அங்கு மாணவ-மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், மாணவ-மாணவிகளை கவரும் வகையில் யானை, டைனோசர் போன்ற விலங்குகளின் உருவ சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளது.
திறக்க வேண்டும்
பூங்கா பகுதியில் ராக்கெட்டுகள் புறப்படுவதற்கு தயாராக உள்ளதைபோல மாதிரி ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உலக உருண்டை, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மாதிரி வடிவங்கள், விசைகளை அறிந்து கொள்ளும் கருவிகள் என ஏராளமான சிறிய கருவிகளும் நிறுவப்பட்டு உள்ளன.
அனைத்து பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் இன்னும் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்காவை உடனடியாக திறக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் கோரிக்கை       விடுத்துள்ளனர்.

Next Story