மழையால் வியாபாரம் பாதிப்பு


மழையால் வியாபாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 15 May 2022 3:19 AM IST (Updated: 15 May 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

உடையார்பாளையம்:
உடையார்பாளையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடந்தது. வழக்கமாக மாலை 4 மணிக்கு மேல்தான் சந்தையில் வியாபாரம் மும்முரமாக நடக்கும். ஆனால் உடையார்பாளையத்தில்  நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை பெய்தது. இதனால் வாரச்சந்தையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வராத நிலையில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் காய், கனிகளை விற்க முடியாமல் தவித்தனர்.

Next Story