பெரம்பலூரில் கொட்டித்தீர்த்த மழை
பெரம்பலூரில் மழை கொட்டித்தீர்த்தது.
பெரம்பலூர்:
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று பகல் நேரத்தில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 7.30 மணியளவில் பெரம்பலூரில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழை பெய்தபோது மின்தடை ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story