சைபர் கிரைம் போலீசின் புதிய அவசர உதவி எண் குறித்து விழிப்புணர்வு
சைபர் கிரைம் போலீசின் புதிய அவசர உதவி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சைபர் கிரைம் போலீசின் புதிய அவசர உதவி எண்ணான 1930 குறித்தும், குற்றங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உள்ள www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் அனைத்து வழித்தடங்களிலும், பெரம்பலூர் நகரின் அனைத்து வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் ஒட்டப்பட்டது.
Related Tags :
Next Story