பெண் விஷம் குடித்து தற்கொலை


பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2022 3:25 AM IST (Updated: 15 May 2022 3:25 AM IST)
t-max-icont-min-icon

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பிலிமிசை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். அரசு பஸ் டிரைவர். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 29). நேற்று மாலை வீட்டில் இருந்த ராஜேஸ்வரி திடீரென்று பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேஸ்வரி திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story