மதுபிரியர்களால் இடையூறு


மதுபிரியர்களால் இடையூறு
x
தினத்தந்தி 15 May 2022 3:36 AM IST (Updated: 15 May 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் டாஸ்மாக் கடை முன் மது அருந்தும் மது பிரியர்கள் இடையூறு செய்கின்றனர்.

 ஆம்பூர்
ஆம்பூரில் டாஸ்மாக் கடை முன் மது அருந்தும் மது பிரியர்கள் இடையூறு செய்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பேரணாம்பட்டு சாலையில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையின் அருகில் மாலை நேரத்தில் மதுபானம் வாங்க வருவோர் சாலையோரம் கும்பலாக நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். மதுபானக்கடையை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் குறைந்த வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story