ரூ.5¾ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்ற ரூ.5¾ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
அணைக்கட்டு
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்ற ரூ.5¾ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
அண்டை மாநிலங்களிலிருந்து குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரிவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு மினி வேனை நிறுத்தினர். உடனே மினி வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை போலீசார் பிடித்துக்கொண்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில்கூறினர்.
ரூ.5¾ லட்சம்குட்கா பறிமுதல்
அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மினி வேனை சோதனை செய்ததில் 50 பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஜேகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாகப்பா என்பவரது மகள் வேல்முருகன் (வயது 24), முனிராஜ் மகன் சக்திவேல் (22) என்பதும், தப்பி ஓடிய டிரைவர் ஓசூர் பகுதியைச்சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் நாகேஷ் (24) என்பதும் தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு போதை பொருட்களை கடத்தி சென்றதாக அவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மினி வேனில் இருந்த 1,200 கிலோ குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5¾ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story