ரூ.50 லட்சம் எலக்ட்ரானிக் உதிரிபாகங்களுடன் மினிலாரி கடத்தல்
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியை ரூ.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் உதிரிபாகங்களுடன் மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியை ரூ.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் உதிரிபாகங்களுடன் மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர்.
மினி லாரி கடத்தல்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இயங்கி வரும் பேட்டரி ஆட்டோ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மோட்டார் மற்றும் உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களை, சென்னை விமான நிலையத்தில் இருந்து மினி லாரி மூலம் எடுத்து சென்றுள்ளனர்.
மினி லாரியை சென்னையை சேர்ந்த அருண்குமார் ஓட்டி சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடி பகுதியில் உள்ள டீ கடை முன்பு லாரியை நிறுத்தி விட்டு, சாவியை லாரியிலேயே விட்டுவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். டீயை வாங்கிகொண்டு திரும்புவதற்குள் மர்ம நபர்கள் ரூ.50 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களுடன் மினி லாரியை கடத்தி சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அப்பகுதி மக்களுடன் லாரியை பிடிக்க முயன்றும் லாரியை பிடிக்க முடியவில்லை. மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அருள்குமார் அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் வாணியம்பாடி டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் லாரியை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்து பரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் லாரியிடன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story