குன்னூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
குன்னூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
குன்னூர்
குன்னூர் அருகே நல்லப்பன் தெரு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 63-வது திருக்கரகம் மற்றும் 3-ம் ஆண்டு பூப்பல்லக்கு உற்சவ விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனை அன்னதானம், கரக ஜோடனைக்கு புறப்படுதல் ஆகியவை நடைபெற்றன. 14-ந் தேதி அபிஷேக ஆராதனை, விளக்கு பூஜை, அன்னதானம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
பின்னர் பூப்பல்லக்கு உற்சவம் கேட்டில் பவுண்டு முனிஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் பவனியாக வந்து கோவிலை அடைந்தது. இதனை தொடர்ந்து உச்சிபூஜை நடைபெற்றது. 15-ந் தேதி பால்குடம் எடுத்தல், அலகு குத்தி வருதல், அம்மனின் திரு கரக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
16-ந்தேதி (திங்கட்கிழமை)மஞ்சள் நீராட்டு மற்றும் அபிஷேக ஆராதனை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் மறு பூஜையும் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story