வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி நியமன ஆணை


வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 15 May 2022 6:48 PM IST (Updated: 15 May 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சங்கங்கள் இணைந்து நேற்று காலை வேலை வாய்ப்பு முகாம் நடத்தின. முகாமில் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் டாக்டர் கே.செந்தில்குமார் வரவேற்றார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை தேவராஜ், திருப்பத்தூர் நல்லதம்பி, ஆம்பூர் வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். 

இதில் 1,300பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 50 பேருக்கு கலெக்டர் பணி  நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார், நகரமன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், நகர பொறுப்பாளர் அன்பு என்ற அன்பழகன், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story