சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு- மராத்தி நடிகைக்கு போலீஸ் காவல்
சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய மராத்தி நடிகை கேதகி சிதாலேயை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தானே,
சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய மராத்தி நடிகை கேதகி சிதாலேயை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மராத்தி நடிகை கைது
மராத்தி நடிகை கேதகி சிதாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை முகநூலில் பதிவேற்றி இருந்தார். வேறு ஒரு நபர் எழுதியாக கூறப்படும் அந்த பதிவில், 'நரகம் உங்களுக்காக காத்து இருக்கிறது', ' நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்' போன்ற கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தானே போலீசார் நேற்று கேதகி சிதாலேயை கைது செய்தனர்.
போலீஸ் காவல்
பின்னர் அவர் தானே கொண்டு வரப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது.
இதேபோல சரத்பவாருக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த நாசிக்கை சேர்ந்த நிக்கில் பாம்ரே என்ற 23 வயது பார்மசி மாணவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story