பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி


பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 May 2022 7:16 PM IST (Updated: 15 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி

பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் மரவாபாளையத்தில் இருந்து பரமத்திவேலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் 3 ரோடு அருகே சென்றபோது, பின்னால் வந்த மொபட் ஒன்று குமரன் மீது‌ மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்‌ அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் இறந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பரமத்திவேலூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story