குன்னூர் டால்பின் நோஸ் சாலையில் சுற்றுலா வாகன அதிகரிப்பால் போக்குவரத்து பாதிப்பு
குன்னூர் டால்பின் நோஸ் சாலையில் சுற்றுலா வாகன அதிகரிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. பூங்காவை கண்டு களிக்கும் சுற்றுலா பயணிகள் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் ஆகிய இயற்கை காட்சி முனைகளை கண்டு களிக்க செல்கின்றனர். இயற்கை காட்சி முனைகளான லேம் ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய பகுதிகள் ஒரே சாலையில் அமைந்துள்ளன. இந்த இரு காட்சி செல்லும் சாலை சி.எம்.எஸ். பகுதியிலிருந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி இடையே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது காப்பு காட்டுப்பகுதி இங்கு இருப்பதால் சாலையை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் சீசன் காலங்களில் இந்த சாலையில் வாகன நெரிசல் அதிகம் இருக்கும். 15-ந்தேதி ஞாயிற்றுகிழமை என்பதாலும், கோடை விழா நடந்து வருவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. லேம்ஸ்ராக், டால்பின் நோஸ்செல்லும் சுற்றுலா வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. சாலை குறுகியதாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடமின்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நடுகாட்டில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கிராமமக்களும் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story