கலசபாக்கம் பகுதியில் 101 மில்லிமீட்டர் மழை 900 ஏக்கர் நெல் நீரில் மூழ்கியது

கலசபாக்கம் பகுதியில் 101 மில்லிமீட்டர் மழை 900 ஏக்கர் நெல் நீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 15 May 2022 7:19 PM IST (Updated: 15 May 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் பகுதியில் 101 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததையடுத்து 900 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலசபாக்கம்

சூறாவளி காற்று

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை யெ்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலசபாக்கம் பகுதியில் கன மழை ெபய்தது. பலத்த மழையால் கலசபாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. கலசபாக்கம் வழியாக ஓடும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று காலை 8 மணி வரை 101 
மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.
கலசபாக்கம், பில்லூர், கப்பலூர், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், லாடவரம், பூண்டி, நார்த்தாம்பூண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தனர். இந்த நிலையில் பலத்த மழை காரணமாக மேற்கண்ட பகுதியில் சுமார் 900 ஏக்கர் நெற் பயிர்கள் சாய்ந்து மழை தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. 
இதனால் கடந்த மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டு பயிர் செய்த நெற் பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருறந்தபோது மழையால் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

நிவாரணம் வழங்க வேண்டும்

மேலும் இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story