கோத்தகிரியில் படுகர் தின விழா கோலாகலம்
கோத்தகிரியில் படுகர் தின விழா நடந்தது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15 -ந் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி படுகர் தினத்தையொட்டி பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராம மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். 19 ஊர் த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் படகர்களின் தந்தை என்று அழைக்கபடும் மறைந்த ராவ் பகதூர் ஆரி கவுடர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. எழுத்தாளர் ஓரசோலை சுனில் ஜோகீ எழுதிய படுகர்களின் வரலாறு குறித்த 'மாதி ' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story