மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க கோரிக்கை


மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 7:53 PM IST (Updated: 15 May 2022 7:53 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

மயிலாடுதுறை
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சபா.அருள்மணி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் ஜானகிராஜா மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். 
மாவட்ட செயலாளர் கணேசன் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆர்.தாமரைச்செல்வி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வி.சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
மாற்றுத் திறனாளிகள் அலுவலகம்
இந்த மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அமைக்க வேண்டும்.
 மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வங்கிகளிலும் நிபந்தனையற்ற சுயதொழிற்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அலுவலகங்களில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊர்வலம்
 முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். இந்த ஊர்வலம் விஜயா சினிமா தியேட்டர் அருகே நிறைவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டில், சங்கத்தின் மாநில தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ஜான்சிராணி, மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர் பி.ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


Next Story