சாத்தான்குளம் அருகே பெண் காங்கிரஸ்பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே தோட்டத்தை சேதப்படுத்திய பிரச்சினையில் பெண் காங்கிரஸ்பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையை சேர்ந்த ஜீசஸ் அந்தோணி சேவியர் (வயது 47) விவசாயி. இவர்கடந்த 2015-ம் ஆண்டு தனது தோட்டத்தை அடமானம் வைத்து சாத்தான்குளம் அருகேயுள்ள போலையார்புரம் துரைப்பழம் மகன் சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் தோட்டத்தை ஒப்படைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளதாம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பல் ஒன்று, தோட்டத்தில் அத்துமீறி புகுந்து பொருட்களை சேதப்படுத்தி விட்டு சேவியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ், அவரது மனைவியும், சாத்தான்குளம் ஒன்றியக்குழு 7-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் சுபா கிறிஸ்டி பொன் மலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய 3 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story