மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது


மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
x
தினத்தந்தி 15 May 2022 8:40 PM IST (Updated: 15 May 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

மாக்கினாம்பட்டி அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது


பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

 காலையில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்கார பூஜை, உகப்படிப்பு நடந்தது. 

பகல் 12 மணியளவில் சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, வாழை, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை உள்ளிட்ட பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன், உச்சிப்படிப்பு நடைபெற்றது. 

இதையடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்ட னர். 

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ் ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.

Next Story