வால்பாறையில் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது


வால்பாறையில் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது
x
தினத்தந்தி 15 May 2022 8:49 PM IST (Updated: 15 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது


வால்பாறை

வால்பாறையில் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

வால்பாறையில் மழை

வால்பாறையில் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயிலில் தாக்கம் தொடங்கியது. ஆனால் நேற்று குளிர்ந்த காற்று வீசியது. 

இதைத்தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

நேற்று சந்தை நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வால்பாறைக்கு வந்து இருந்தனர். அவர்கள் குடைகளை பிடித்தபடி சந்தைக்கு வந்து வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

ஆறுகளில் தண்ணீர்


இது போல் வால்பாறைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழை யில் நனைந்தபடி பல்வேறு இடங்களை சுற்றுப்பார்த்து மகிழ்ந்த னர். 

விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருப்பதால் நக ராட்சி படகு இல்லத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக படகு இல்லத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. 

வால்பாறை ஸ்டேன்மோர் உள்ளிட்ட ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. 

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வருகிற நாட்களிலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.

 இதனால் வால்பாறையிலும் மழை பெய்வதற்கான சூழல் உருவாகி உள்ளது. இந்த மழை நீடிக்கும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகிறார்கள்.



Next Story