பஸ் நிலையம் இருக்கையில் அமர்ந்தவர் மின்சாரம் தாக்கி பலி


பஸ் நிலையம் இருக்கையில் அமர்ந்தவர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 15 May 2022 8:49 PM IST (Updated: 15 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையம் இருக்கையில் அமர்ந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

பெங்களூரு:

  பெங்களூரு ஹெப்பால் பஸ் நிலையத்திற்கு நேற்று  இரவு ஒருவர் வந்தார். அவர் அங்கு பி.எம்.டி.சி. பஸ்சுக்காக காத்திருந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அவர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு இருக்கை ஒன்றில் அமர்ந்தார். அப்போது அவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த சிலர் இதுபற்றி போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி பெஸ்காம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பேத்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்தில் இறந்தவர், இரும்பு இருக்கையில் அமர்ந்தபோது மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுபற்றி ஹெப்பால் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story