பெண்களுக்கு பாலியல் தொல்லை; ஆப்பிரிக்கா வாலிபர் கைது


பெண்களுக்கு பாலியல் தொல்லை; ஆப்பிரிக்கா வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2022 8:55 PM IST (Updated: 15 May 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆப்பிரிக்கா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

  பெங்களூரு சிவராமகாரந்தா படாவனே பகுதியில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் காலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் முதியவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் அங்கு வந்து அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்தவரான ஜேம்ஸ் என்பவர், திடீரென நிர்வாணமாக ஓடினார். இது அங்கிருந்த பலரையும் முகம் சுழிக்க வைத்தது. 

மேலும் அவர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அங்கிருந்தவர்கள் சம்பிகேஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அந்த ஜேம்சை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story