நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு


நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 9:00 PM IST (Updated: 15 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

சங்கரன்கோவில்:

சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவிலில் புதிய பஸ் நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைப்பதற்காக பல்வேறு இடங்களை பார்வையிட்டார். நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது சங்கரன்கோவிலில் பல்வேறு வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள் மேற்கொண்டு முன்மாதிரி நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று நகராட்சி தலைவர் உமா மகேசுவரி சரவணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வலியுறுத்தினார்.
நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல பொறியாளர் சேர்மக்கனி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் மாரியம்மாள், பணி மேற்பார்வையாளர் கோமதிநயகம், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், தேர்தல் பிரிவு அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story